ஈமுகோழிகளின் பண்ணைப் பொருளாதாரம்

ஈமுகோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினை பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில் 68% கோழிகளை வாங்குவதற்கும், 13% பண்ணையினை அமைப்பதற்கும், 19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கருவுற்ற முட்டையினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு ரூ.1232 செலவாகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ஜோடி ஈமுக்கோழி வருடத்திற்கு ஆகும் தீவனச்செலவு ரூ.3578. ஒரு நாள் வயதடைந்த ஈமுக் கோழி குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.2500-3000. எனவே, ஈமுகோழிப் பண்ணையினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவிகித்திற்கு அதிகமாகவும், தீவனச்செலவு குறைவாகவும், குஞ்சு பருவத்தில் இறப்பு சதவிகிதம் 10 சதவிகிதத்திற்கு குறைவாகவும் இருக்கவேண்டும்.



Related Keywords: Emu, Emu Oil, Emu Birgds, Emu Farmins, Emu Farming, Emu Meat, Emu Business, Emu Farming idea, Emu Farm in india, Emu news, Emu information, Emu Foods

0 கருத்துகள்:

கருத்துரையிடுக