ஈமுக் கோழிக் குஞ்சுகள் வளரும் போது அவற்றுக்கு பெரிய தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர் தட்டுகள் தேவைப்படும். வளரும் பருவத்தில் ஆண், பெண் பறவைகளை தனியாக கண்டறிந்து அவற்றை தனித்தனியாக வளர்க்க வேண்டும். மேலும் கொட்டகையின் தரையில் போதுமான அளவு நெல் உமியினை ஆழ்கூளமாக இடவேண்டும். குஞ்சுகள் 34 வார வயதினை அடையும் வரை அல்லது 25 கிலோ உடல் எடையினை அடையும் வரை, அவற்றுக்கு வளரும் பருவத்திற்கான தீவனத்தினை அளிக்கவேண்டும். இந்த பருவத்தில் ஈமுக்கோழி குஞ்சுகளுக்கு அவற்றுக்கு தேவைப்படும் தீவனத்தின் அளவில் 10 சதவிகிதமாக பசுந்தீவனத்தினை இட ஆரம்பிக்கவேண்டும். எல்லா நேரத்திலும் சுத்தமான குடிநீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வளரும் பருவம் முழுவதும் ஆழ்கூளம் ஈரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வளரும் பருவத்தில் ஒரு ஈமுக்கோழிக்குஞ்சுக்கு 100 சதுர அடி அளவு இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகளை பிடிக்கும் போது அவற்றின் உடல் பக்கவாட்டில் பிடித்து, பின் அவற்றின் இறக்கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, பிடிப்பவரின் கால்களுக்கு இணையாக இழுக்கவேண்டும். ஈமுக்கோழிகள் பக்கவாட்டாகவும் முன்பாகவும் உதைக்கக்கூடியவை. எனவே, இக்கோழிகளை கையாளும்பொழுது கவனமாக கையாள வேண்டும்.
Related Keywords: Emu, Emu Oil, Emu Birgds, Emu Farmins, Emu Farming, Emu Meat, Emu Business, Emu Farming idea, Emu Farm in india, Emu news, Emu information, Emu Foods
வளரும் ஈமு கோழி குஞ்சுகளை பராமரிக்கும் முறைகள்


வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகள்>>>
3 கருத்துகள்:
good
நான் கோழிப்பண்ணை வைத்திருக்கிறேன்.
எனக்கு இப்பொழுது ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபாடு வந்திருக்கிறது.எனவே எமது ஊரில் எமு கோழி வளர்ப்பிற்கு உங்களால் உதவ முடியுமா?
முடியுமெனில் 91suthan @gmail .com என்ற மின்னஞ்சலுடன் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
-------சுதன்----------
எனது ஊர் சிலோனில் யாழ்ப்பாணம் .நான் கோழிப்பண்ணை வைத்திருக்கிறேன்.
எனக்கு இப்பொழுது ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபாடு வந்திருக்கிறது.எனவே எமது ஊரில் எமு கோழி வளர்ப்பிற்கு உங்களால் உதவ முடியுமா?
முடியுமெனில் 9suthan @gmail .com என்ற மின்னஞ்சலுடன் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
-------சுதன்----------
கருத்துரையிடுக