ஈமு குஞ்சுகளை பராமரிக்கும் முறைகள்



ஈமு குஞ்சுகள் சராசரியாக 370-450 கிராம் எடை இருக்கும் (முட்டையின் எடையில் 67 சதவிகிதம்). குஞ்சு பொரித்து முதல் 48-72 மணி நேரத்தில் குஞ்சுகளை குஞ்சு பொரிப்பானிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் முட்டையின் மஞ்சள் கருவினை குஞ்சுகளின் உடல் நன்கு உறிஞ்சிக்கொள்வதற்கும், குஞ்சுகளின் உடல் நன்கு உலரச்செய்வதற்கும் ஏதுவாகிறது.

கோழிக்குஞ்சுகளைப் போலவே ஈமுக்குஞ்சுகளுக்கும் முதல் சில நாட்களுக்கு அதிக வெப்பநிலை தேவைப்படும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே குஞ்சுக்கொட்டகையை கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து ஆழ்கூளமாக நெல் உமியினைப் போட்டு அதன் மீது சாக்கினை பரப்பி விட வேண்டும். குஞ்சு கொட்டகையில், ஈமு குஞ்சு ஒன்றிற்கு 4 சதுர அடி இடம் தேவைப்படும். குஞ்சு கொட்டகையில், முதல் 10 நாட்களுக்
கு, 90°F வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பின்பு, பத்து நாள் முதல் 3-4 வாரங்களுக்கு, 85°F வெப்பம் குஞ்சுக்கொட்டகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குஞ்சுக்கொட்டகையில் மேற்குறிப்பிட்ட வெப்பநிலையினை பராமரிப்பதற்காக நூறு சதுர அடி இடத்திற்கு ஒரு 40 வாட்ஸ் பல்பினை பயன்படுத்தவேண்டும். சரியானவெப்பநிலையினை குஞ்சுக்கொட்டகையில் பராமரிப்பதன் மூலம் குஞ்சுகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு வழி செய்யலாம். குஞ்சு கொட்டகையில் போதுமான அளவு தீவனத்தட்டுகளும், தண்ணீர் தட்
டுகளும்
இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குஞ்சுகள் வெளியே சென்றுவிடாமல் இருக்க, 2.5
அடி உயரத்
திற்கு ஒரு தடுப்பினை அமைக்கவேண்டும். மூன்று வார வயதில் குஞ்சு தடுப்பினை இன்னு
ம் அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு தேவையான இடஅளவினை அதிகப்படுத்தி, ஆறாம் வார வயதில் இத்தடுப்பினை எடுத்துவிடலாம். முதல் 14 வாரத்திற்கு அல்லது குஞ்சுகள் 10 கிலோ உடல் எடையினை அடையும் வரை, குஞ்சுத்தீவனத்தை ஈமுக்கோழி கு
ஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். இந்த வயதில் ஈமு குஞ்சு ஒன்றிற்கு
திறந்தவெளியுடன் 30 சதுர அடி இடம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொட்டகையின் தரை சுத்தமாகவும் ஈரத்தன்மை இல்லாமலும் பராமரிக்கவேண்டும்




Related Keywords: Emu, Emu Oil, Emu Birgds, Emu Farmins, Emu Farming, Emu Meat, Emu Business, Emu Farming idea, Emu Farm in india, Emu news, Emu information, Emu Foods

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

I need to launch the EMU birds&business in my home town

Unknown சொன்னது…

ஈமு பண்ணை வைக்க சுமார் எவ்வளவு முதலீடு தேவைப்படும்

gokilan சொன்னது…

ஈமு பண்ணை வைக்க சுமார் எவ்வளவு முதலீடு தேவைப்படும்

கருத்துரையிடுக