ஈமுக்களின் பராமரிப்பிற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சரிவிகித தீவனமளிப்பது முக்கியமாகும். ஈமுக்களுக்கு இது வரை தேவைப்படும் சத்துகளின் சரியான அளவு கண்டறியப்படவில்லை. எனினும் ஆராய்ச்சி முடிவுகளின்படி ஈமுகோழிகளுக்கு தேவையான சத்துகளின் அளவு பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோழிகளுக்கு தீவனம் அரைக்க பயன்படும் மூலப்பொருட்களையே ஈமுகோழிகளுக்கும் பயன்படுத்தலாம். தீவனச்செலவு மட்டுமே மூலதன செலவில் 60-70 சதவிகிதம் இருப்பதால், குறைந்த செலவுடைய தீவன மூலப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் தீவன செலவினை குறைக்கலாம். வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஈமு கோழிப் பண்ணைகளில் ஒரு ஜோடி ஈமு கொழிகள் உட்கொள்ளும் தீவனத்தின் அளவு 394-632 கிலோ இருக்கும்.
ஈமுக்கோழித் தீவன மூலப்பொருட்கள் (kg/100kg)
சத்துகள்குஞ்சுகள் (10 கிலோ உடல் எடை அல்லது 10-14 வார வயது) வளரும் ஈமுக்கோழிகள்
15-34 வார வயது அல்லது 10-25 கிலோ உடல் எடை வரை)இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகள் புரதம் % 20 18 20 லைசின் % 1.0 0.8 0.9 மெத்தியோனின்% 0.45 0.4 0.40 டிரிப்டோபேன் % 0.17 0.15 0.18 திரியோனின் % 0.50 0.48 0.60 கால்சியம் 1.5 1.5 2.50 மொத்த பாஸ்பரஸ் % 0.80 0.7 0.6 சோடியம் குளோரைட் % 0.40 0.3 0.4 நார்ச்சத்து (அதிகஅளவு) % 9 10 10 வைட்டமின் A (IU/kg) 15000 8800 15000 வைட்டமின் D3 (ICU/kg) 4500 3300 4500 வைட்டமின் E (IU/kg) 100 44 100 வைட்டமின் B 12 (IU/kg)) 45 22 45 கோலின் (mg/kg) 2200 2200 2200 தாமிரம் (mg/kg) 30 33 30 துத்தநாகம் (mg/kg) 110 110 110 மாங்கனீஸ் (mg/kg) 150 154 150 ஐயோடின் (mg/kg) 1.1 1.1 1.1 மூலப்பொருட்கள் குஞ்சுகள் (10 கிலோ உடல் எடை அல்லது 10-14 வார வயது) வளரும் ஈமுக்கோழிகள்
15-34 வார வயது அல்லது 10-25 கிலோ உடல் எடை வரை)இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகள் மக்காச்சோளம் 50 45 50 சோயாபீன் 30 25 25 எண்ணெய் எடுத்த அரிசித்தவிடு 10 16.25 15.50 சூரியகாந்தி புண்ணாக்கு 6.15 10 0 டைகால்சியம் பாஸ்பேட் 1.5 1.5 1.5 கால்சைட் பவுடர் 1.5 1.5 1.5 கிளிஞ்சல் 0 0 6 உப்பு 0.3 0.3 0.3 இதர தாதுஉப்புகள் 0.1 0.1 0.1 வைட்டமின்கள் 0.1 0.1 0.1 இரத்தக்கழிச்சல் நோய்க்கான மருந்து 0.05 0.05 0 மெத்தியோனின் 0.25 0.15 0.25 கோலின்குளோரைட் 0.05 0.05 0.05
Related Keywords: Emu, Emu Oil, Emu Birgds, Emu Farmins, Emu Farming, Emu Meat, Emu Business, Emu Farming idea, Emu Farm in india, Emu news, Emu information, Emu Foods
தீவன மேலாண்மை


பல்வேறு வயதுடைய ஈமுக்கோழிகளுக்குத் தேவைப்படும் சத்துகளின் அளவு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக